வெள்ளி, 30 மார்ச், 2018

காசியில் கருடன் ஏன் பறப்பதில்லை

சிவபெருமானிற்கான பிரசித்தி பெற்ற ஆலயங்களில் காசியும் ஒன்று. காசியில் கருடன் பறப்பதில்லையாம்.
அதே போல கவுளி (பல்லி) சொல்வதில்லையாம். அதற்கான காரணம் அவை இரண்டிற்குமே காலபைரவர் சாபம் அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அது என்னவெனில் இராவண சம்ஹாரம் முடிந்ததும் ராமேஷ்வரம் வந்த ஸ்ரீராமர் சிவபெருமானை பூஜிக்க விரும்பி லிங்கம் ஒன்றை ஸ்தாபிக்க எண்ணிராராம்.
ஆஞ்சனேயரை அழைத்து காசிக்குப்போய் ஒருசிவலிங்கம் எடுத்துவா என ஸ்ரீராமர் ஆஞ்சனேயரிடம் கூறுகின்றார்.
ஸ்ரீராமரின் கட்டளையினை ஏற்று காசிக்குச் சென்ற ஆஞ்சநேயர் அங்கு அதிகமாக லிங்கம் இருந்த இடத்துக்குச் சென்று பார்த்தார்.
அங்கே காணப்பட்ட லிங்கங்களில் எது சுயம்பு லிங்கம் என தெரியாது தடுமாறினாராம், அப்போது ஒரு சிவலிங்கத்துக்கு மேலே கருடன் வட்டமிடுவதை அவர் பார்க்கின்றார்.
உடனே அதுதான் சுயம்புலிங்கம் என அடையாளம் கண்டு கொண்ட ஆஞ்சநேயர் இதை எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தபோது அதை ஆமோதிப்பது போல் பல்லி சத்தமிட்டு ஆதரித்தது.
சுயம்புலிங்கத்தை எடுத்துக் கொண்டு ஆஞ்சனேயர் வெளியே வரும்போது காலபைரவர் இது என் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
என்னைக் கோட்காமல் நீ எப்படி எடுத்துச் செல்லலாம் என்று கூறி தடுத்தார்.
அவரோடு வாக்குவாதம் செய்யும்போது கவுளி என்ற பல்லியும் கருடனும் ராமர் காரியத்துக்கு உதவி செய்தார்கள் என ஹனுமன் கூறினார்.
அதற்காக கோபம் கொண்ட காலபைரவர் தன் கடமைக்கு குந்தகம் உண்டாக்கிய பல்லியை காசியில் சத்தமிடக்கூடாது என்றும்,
கருடனை காசியில் பறக்கக் கூடாது என்றும் சாபம் இட்டாராம், இப்போதும் கூட கருடன் காசியில் பறப்பதில்லை. அதோடு கவுளியும் சப்தமிடுவதில்லை என கூறுகின்றனர்.