திங்கள், 26 மார்ச், 2018

இன்றைய ராசிபலன் 27.03.2018

மேஷம்:
பிரச்னைகளின் ஆனிவேரை கண்டறிந்து சாதுர்யமாக தீர்ப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்:
 குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிகொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்
மிதுனம்:
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளி போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
கடகம்:
 ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைகூர்ந்து பேசாதீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
சிம்மம்:
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்
டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களைப் பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
கன்னி:
மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்து காட்டுவீர்கள். நம்பிக்கைகுரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். புது பொருள் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
துலாம்:
 தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துகொள்வார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
விருச்சிகம்:
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.
தனுசு:
 சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
மகரம்:
பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கும்பம்:
 குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மீனம்:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்