உலகம் முழுவதிலும்
பரந்துபட்டு வாழும் இந்து க்கள் யாவரும் இன்று முதல் வரும் ஒன்பது
நாட்களிலும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். ஒளியும் இருளும்
சமபங்காகக் கொண்ட சுற்றில் ஒளிக்காலத்தில் வசந்த நவராத்திரியும் இருள்
காலத்தில் சாரதா நவராத்திரியும் என பெயர் பெற்றுள்ளது. இதில் சாரதா
நவராத்திரியே விரதமாகவும் பண்டி கையாகவும் விழாவாகவும் கொண்டாடப்
படுகின்றது.