சனி, 31 மார்ச், 2018

ரூ.4.5 கோடியில் சனீஸ்வரனுக்கு தங்கத்தேர்

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள்
வழிபாடு செய்து வருகின்றனர். முக்கிய நாட்களில் சனீஸ்வர பகவானை தேரில் அமர்த்தி ஊர்வலம் கொண்டு செல்லவர். அதற்காக இந்த கோவிலில் இரண்டு மரத்தால் ஆன தேர்கள் உள்ளன.
இந்நிலையில், கோவிலுக்கு தங்கத்தினால் ஆன தேர் செய்யப்படும் என 2014-ம் ஆண்டு கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தங்கத்தேர் செய்யும் பணியை இன்று புதுச்சேரி வேளாண் துறை மந்திரி ஆர். கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
15 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட தேரானது எட்டு கிலோ தங்கம் தங்கத்தினால் 4.5 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட உள்ளது. இதற்கான தொகையானது பக்தர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்டது. தங்கத்தேர் செய்யும் பணி நான்கு மாதங்கள் முடிவடையும் என சனீஸ்வர பகவான் கோவில் அதிகாரி ஏ. விக்ராந் ராஜா தெரிவித்தார்.