திங்கள், 5 செப்டம்பர், 2016

விநாயகர் சதுர்த்தி” வீட்டில் வைத்து வணங்குவது எப்படி?

அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார்.
கணபதியும் மகிழ்ந்து பிரம்மனே, வேண்டிய வரம்
கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
இதன் காரணமாகத்தான் விநாயகரை கண்டால் படைப்பு கடவுளான பிரம்மனே அஞ்சுவான் என்று கூறுவார்கள்.
யானை முகத்தானை பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் என்ற பல பெயர்களில் அழைப்பர்.

அது போல விநாயகரை கோவில் சென்று வணங்க முடியாதவர்கள் தங்கள் வீட்டில் வைத்து வணங்கலாம்.
அதிகாலையில் எழுந்து மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.
அதன் பின் களிமண்ணால் ஆன விநாயகர் அல்லது கையில் மஞ்சள் பிடித்த விநாயகரின் மீது எருகம் புல், அருகம் புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்தால் விநாயகர் நம் வீட்டில் குடியிருப்பார்.
அதிலும் அவருக்கு பிடித்த இனிப்பு வகைகளான லட்டு, அதிரசம், கொழுக்கட்டை, அப்பம் மற்றும் வடை, பொரி, அவல், திராட்சை, நாவல், விளாம் பழம் முதலியவற்றை வைத்தும் வணங்கலாம்.
மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, களி மண்ணால் ஆன விநாயகர் சிலை அல்லது கையில் மஞ்சள் பிடித்து வைத்த விநாயகரை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ கரைத்து விடலாம்.