வியாழன், 8 செப்டம்பர், 2016

விநாயகரை கரைக்க சென்ற 12 பேர் நதியில் பலி

விநாயகர் சதுர்த்தியின் போது பூஜைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி கர்நாடக மாநிலம் அடோனஹள்ளியில்
செல்லும் துங்கா நதியில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக நாட்டுப்படகில் விநாயகர் சிலையுடன் 30�க்கும் மேற்பட்டவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிக பாரம் காரணமாக ஆற்றின் நடுப்பகுதியில் படகு கவிழ்ந்தது. இதில் 12 பேர் நீரில் மூழ்கினர்.

ஆற்றில் மூழ்கியவர்களை தேடுவதற்காக போலீசாருடன், நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தீவிரமாக தேடி 3 பேரின் பிணங்களை மீட்டனர்.

மீதமுள்ளவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.