ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நல்லூர் கந்தனின் மஹோற்சவத்தை சிறப்பித்த பரதநாட்டியம்

இந்தியாவில் இருந்து வருகைத் தந்த பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ராதிகா சுராஜித்தின் நெறியாள்கையில், அவரது குழுவினரின் 'ஓம் சரவணபவ' பரதநாட்டியம் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு
நடைபெற்றுள்ளன.
இந்தியத் துணைத்தூதரகமானது குறித்த நிகழ்வை, வடக்கு மாகாணசபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான பேராயம் (ICCR) ஆகியவற்றின் அனுசரணையுடன் நடாத்தியுள்ளது.
இந்தியாவின் பரதநாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ராதிகா சுராஜித்தின் குழுவினருடைய 'ஓம் சரவணபவ' பரதநாட்டிய அளிக்கைகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை ஆகஸ்ட் 31ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 1ஆம், 2ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்தியது.

31 ஆகஸ்ட் 2016 அன்று யாழ். பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது.
இந்த பயிற்சிப் பட்டறையில் 300க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
ஸ்ரீமதி ராதிகா சுராஜித்தின் நெறியாள்கையில் அவரது குழுவினரின் 'ஓம் சரவணபவ' பரதநாட்டிய நிகழ்வு வியாழக்கிழமை 1, செப்டம்பர் 2016 சங்கிலியன் தோப்பு நல்லூரில் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட கலாரசிகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வெள்ளிக்கிழமை 2 செப்டம்பர் 2016 அன்று நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் ஸ்ரீமதி ராதிகா சுராஜித்தின் நெறியாள்கையில் 'பாட்டும் பரதமும்' பரத நிகழ்வும் நடைபெற்றது.
அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் மிகவும் சிறப்பாக இக்கலைநிகழ்வு நடைபெற்றது.
நெடுந்தீவின் வரலாற்றில் இவ்வாறான மிகப்பெரிய அளவில் அதிலும் குறிப்பாக இந்தியக் கலைஞர்கள் பங்கு கொள்ளும் கலை நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியமை இதுவே முதன் முறையாகும்
.