புதன், 7 செப்டம்பர், 2016

இன்றைய ராசிபலன்.08.09.2016

மேஷம்..எதிலும் நியாயமாக நடக்கவேண்டிய நாள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
ரிஷபம்-இன்பச் சுற்றுலா, குறுகிய தூரப் பயணங்கள், நல்ல வருமானம், மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவுவகைகள் ஆகியவையும் கிடைக்கும்.
மிதுனம்

இன்று, எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும். எதிரிகள் பணிவர்.
கன்னி

அன்பு சகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். முகநூல் மூலமாகப் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள்.
மகரம்

கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். எல்லா வகையிலும் நன்மை, தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும்.
கடகம்

கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
சிம்மம்

அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம்.
துலாம்

இன்று, சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க நண்பர்களுடன் சுமுகமாக இருத்தல் அவசியம். வண்டி, வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து விவேகமாக நடக்கவும்.
மீனம்

தெய்வீக காரியங்கள் ஈடேறும். எளிதில் வெற்றி கிடைக்கும். சுகம், சந்தோஷம், உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
தனுசு

வாயை அடக்கி வம்புக்குச் செல்லாதிருப்பதே சுகம். பெண்களால் விரயச்செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
விருச்சிகம்

இன்று, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார். பெரியோர்பால் நேசம் ஏற்படும்.தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள்.
கும்பம்

இன்று, அனைத்துக் காரியங்களிலும் அனுகூலமான நிலை உருவாகும். தன்னம்பிக்கை, தேகதிடம், வீரம், தைரியம் எல்லாம் ஓங்கும். பிறருக்குக் கட்டளை இடும்படியான அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும்