வெள்ளி, 16 மார்ச், 2018

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

ஜோதிட ராசிகளில் கடைசியாக உள்ள மீன ராசியில் வரும் நட்சத்திரமே ரேவதி. இந்த ஒரு நட்சத்திரக்காரர் மட்டும் பல திறமைகளை தன் கைவசம் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலியாம்.
ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
ரேவதி நட்சத்திரக்காரர்கள் பழி பாவத்திற்கு எப்போதும் பயந்தவர்கள். நேர்மையாக வாழும் இவர்கள் பேச்சில் இனிமையும், கொடுக்கல் வாங்கலில் நாணயமாக உள்ளவர்கள்.
யாரிடமும் தேவை இல்லாமல் பேச மாட்டார்கள். சுதந்திரமாக இருக்க விரும்பும் இவர்கள், தங்களின் ரகசியத்தை காக்கத் தெரியாதவர்கள்.
ஆனால் இவர்கள் ஒருவகையில் சந்தேகப் பிராணிகள். எவ்வளவு தான் உயிருக்கு உயிராக பழகினாலும் நம்ப மாட்டார்கள். நம்பி விட்டால் அவர்களை விட்டு விலக மாட்டார்கள்.
தனது மனம் போலவே நடப்பார்கள். தனக்கு சரி என்று தோன்றியதை துணிந்து செய்வார்கள். இவர்கள் தனது சுய முயற்சியில் முன்னுக்கு வருவார்கள்.
புத்திசாலித்தனம், சாமர்த்தியம், என்பது இவர்களின் கூட பிறந்தது. ஆனால் இவர்களுக்கு 22 வயது வரை சோதனை காலமாக இருக்கும். அதன் பின் வாழ்க்கையில் உயர்ந்து உன்னத நிலையை எட்டி விடுவார்கள்.
ரேவதி முதல் பாதம்
ரேவதி நட்சத்திரத்தில் முதல் பாதம் உள்ளவர்களுக்கு ரேவதி நட்சத்தினுடைய பொதுவான குணங்கள் அனைத்துமே இருக்கும். அதோடு ஆராய்வதில் சிறந்தவர்களாகவும், கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியான மனநிலை உடையவர்களாகவும் திகழ்வார்கள்.
ரேவதி இரண்டாவது பாதம்
இத்தகையவர்களுக்கும் பொதுவான குணங்கள் இருப்பதுடன், பல திறமைகள், செயல்திறன், நிலையற்ற மனநிலை ஆகிய குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேலும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், ஆடம்பர செலவுகளை விரும்பாதவர்களாகவும் இருப்பதால், இவர்கள் வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
ரேவதி மூன்றாம் பாதம்
இவர்கள் சிந்திக்காமல் செயல்படக் கூடியவராகவும், சுயநலம் உடையவர்களாக இருப்பார்கள். துன்பங்களுடன் வாழக்கூடிய இவர்கள் ரேவதி நட்சத்திற்குரிய பொதுவான அனைத்து குணங்களையும் கொண்டவர்கள்.
ரேவதி நான்காம் பாதம்
இவர்கள் ரேவதிற்குரிய பொதுவான குணங்களுடன், எதையும் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். உண்மையை பேசும் இவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழக் கூடியவர்கள். எதிரியை வெல்லக் கூடிய இவர்கள் பிறரை மதிக்கவும் தெரிந்தவர்கள்.-

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி