வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

கற்பூரம் இறைவனுக்கு ஏன் காட்டுகிறோம்? .

இறைவனுக்கு ஏன் கற்பூரம் காட்டுகிறோம்?
அ) கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள
கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும்.
பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.

புகை, எண்ணெய் முதலியன பட்டு மூர்த்தியின்
உருவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல கோவில்களில் வெளியே தான் விளக்குகள் வைக்கப்பட்டு இருக்கும்.
கற்பூரமோ நெய் விளக்கோ காட்டும்போது கடவுளின் உருவம் நன்கு தெரியும்.
அப்போது பட்டர் அல்லது அர்ச்சகர் அந்தக் கோவிலின் , மூர்த்தியின் பெருமையை மனப்பாடமாக ஒப்புவிப்பார்.
இது புத்தகத்தில் படித்துச் சொல்லும் விஷயம் அல்ல.
அவர் கூறுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செவி வழி மூலம் பெறப்பட்ட அரிய விஷயம்.
அவ்வாறு ஒருவர் சுவாமியின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, விவரிக்கும்போது நமது முழு கவனமும் அதன் மீது இருக்கும்.
இவ்வாறு மனம் குவியும்போது நாம் செய்யும் பிரார்த்தனை அப்படியே நிறைவேறும்.
அப்போது கடவுளைத் தரிசனம் செய்யும் எல்லோரும் ஒரே ‘வேவ் லெந்த்’தில் இருப்பதால் இறையருள் பெறுவது எளிதாகிறது.
ஆ) இதற்கு ஒரு தத்துவ விளக்கமும் உண்டு.
மனத்திலுள்ள இருட்டு, அதாவது அஞ்ஞானம், விலக இறை அருள் தேவை.
ஆரத்தியில் காட்டும் தீபம் எப்படி கர்ப்பக்கிரக இருளைப் போக்குகிறதோ அதுபோல, நம் அகத்தில் உள்ள இருளும்
வழிபாட்டில் மறைந்து விடும்.
இ) கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு.

இதை எரிக்கும்போது பதங்கமாதல் (சப்ளிமேஷன் ) என்னும் முறையில் எரிகிறது.
கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள்.
அதாவது அந்தப் பொருளை சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும்.
இதே போல கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.
ஈ) கற்பூரம் வெண்மையானது. அது போல ஆன்மா சுத்த தத்துவ குணமுள்ளது.
கற்பூரம் ஏற்றியவுடன் அது தீபம் போல எரிகிறது.
அதே போல மலம் நீங்கப்பெற்ற ஆன்மாவானது ஞானாக்கினியால் சிவகரணம் பெற்று நிற்கிறது.
கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றி கரைந்து போகிறது.
அதே போல ஆன்மாவானது சரீரத்தை விட்டு நீங்கி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது.
இதோ சுவாமி தயானந்த சரஸ்வதி அளிக்கும் பதில்:
ஆலயத்துக்குச் செல்லும்போது வெளிச்சம் நிறைந்த வெளிப் பிரகாரத்தில் இருந்து கருவறைக்கு முன் வந்து நிற்கிறோம்.
அங்கே இருள் சூழ்ந்து இருக்கிறது. விளக்கு ஒளியில் மங்கலாக விக்ரகம் தெரிகிறது.
அர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி நம்மை தரிசிக்க வைக்கிறார்.
தலையில் உள்ள மணிமுடியால் தலை இருக்கும் இடம் தெரிகிறது.
காதில் உள்ள குழையால் முகம் இருக்கும் இடத்தைப் பார்க்கிறோம்.
கழுத்தில் உள்ள மாலை அவருடைய மார்பைக் காட்டுகிறது
இடையில் உள்ள அணி இறைவனின் மேனியைக் காட்டுகிறது,
காலில் உள்ள சதங்கை அவனது பாதங்களைக் காட்டுகிறது.
ஆகக் கற்பூரம் ஒவ்வொரு இடத்திலும் ஒளியேற்றும்போது, இறைவனின் உருவத்தை நாம் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து விடுகிறோம்.
இது எப்படி இருக்கிறது?
இறைவனின் சக்தியை உணருவதன் மூலம் , அவனைப் புகழ்ந்து பாடுவதன் மூலம் அவனை அடையாளம் காணுவதைப் போலத்தான் இருக்கிறது.
சூடான சூரியனின் கதிர்களும், குளிர்ந்த நிலவின் ஒளியும், கண்ணைக் குளிரச் செய்யும் தாவரங்களின் பசுமையும் தாகத்தைத் தணிக்கும் ஊற்றின் நீரும் இறைவனின் பிரதியாக , அவனுடைய புகழின் வடிவமாக நமக்குத் தரிசனம் தருகின்றன.
அவற்றின் மூலம் இப்படி நாம் இறைவனைப் புரிந்து கொள்கிறோம்.
“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று கூறி மகிழ்கிறோம்.
இதே செயலைத் தான் நாம் ஆலயத்தின் கருவறையிலும் செய்கிறோம்.
இத்தனை சிறப்பான வடிவத்தை சுடர் ஒளி அங்கம் அங்கமாகக் காட்டும் போது, அடையாளம் கண்டு கொள்கிறேனே! என்று கூறி வியக்கிறோம்.
அப்படி உணரும்போது நமது அறியாமை கரைந்து மறைகிறது.
அதே போல கற்பூரமும் ஒளி அணைந்து காற்றில் கரைந்து மறைந்து விடுகிறது.
ஞானாக்கினியில் அறியாமை எரிக்கப்படுவதை, கற்பூரம் நமக்கு ஒளிகாட்டி எரிந்து மறைவதன் மூலம் உணர்த்துகிறது.
ஒளியே வடிவான இறைவனை ஒளி மூலம் உணர்கிறோம்.
அப்போது ஞானமே வடிவான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம்.
இந்தத் தத்துவத்தைக் காட்டுவதே கற்பூரம் ஏற்றித் தரிசனம் செய்ய வைக்கும் நிகழ்ச்சியாகும்”. (சுவாமி தயானந்த சரஸ்வதி).
(குறிப்பு: இப்போது தமிழ்நாட்டுக் கோவில்களில் கற்பூரம் ஏற்றுவதை அனுமதிப்பதில்லை.
இதற்குக் காரணம் தூய கற்பூரத்துடன் செயற்கையான மெழுகைச் சேர்க்கும்போது அது கரித் தூளை உமிழ்கிறது.
இது புறச் சூழலைக் கெடுக்கிறது.
இதற்குப் பதிலாக அதே ஒளியூட்டும் பணியை நெய் விளக்கு செய்கிறது. தத்துவம் ஒன்றே.)
பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
---------------------------------------------------------------
பொதுவாக பூஜையின் போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி சுற்றிப் போடுவது வழக்கம்.
அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும் புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய பாசிடிவ் சக்தி உருவாகிறது.
அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது.
அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது.
கூடவே இறையருளையும் பெற முடிகிறது.
கற்பூரம் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. அதுபோல மனிதன் இறந்த பிறகும் இதே நிலைமைதான்.
எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது.
இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள்.
எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது.
மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது.
இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும்.
அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு.
கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.
மற்றுமொரு தத்துவத்தையும் கற்பூர ஆராதனை உணர்த்துகிறது.
கோவில் மூலஸ்தானத்தின் கருவறையானது காற்று, ஒளி எளிதில் உட்புக முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கும்.
அதனால் அங்கு ஒருவிதமான இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.
நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடைபெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவனை நாம் காணலாம்.
இதேபோல் அலைபாயும் நம் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான்.
அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடி இருக்கும்.
அந்த இருள் அகன்றால்தான் நம் உள் மனதில் உள்ள இறைவனைக் காண முடியும்.வாயால் ஊதித் தீபத்தை அணைப்பது குற்றமாகும்.
கற்பீர தீபம் எரியத் தொடங்கிய நேரம் முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது.
பொதுவாக பூஜையின் போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி சுற்றிப் போடுவது வழக்கம்.
அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும் புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய பாசிடிவ் சக்தி உருவாகிறது.
அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது. கூடவே இறையருளையும் பெற முடிகிறது.
கற்பூரம் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது.
அதுபோல மனிதன் இறந்த பிறகும் இதே நிலைமைதான்.
எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது.
இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது.
மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது.
இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு.
கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.
மற்றுமொரு தத்துவத்தையும் கற்பூர ஆராதனை உணர்த்துகிறது. கோவில் மூலஸ்தானத்தின் கருவறையானது காற்று, ஒளி எளிதில் உட்புக முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கும். அதனால் அங்கு ஒருவிதமான இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.
நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடைபெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவனை நாம் காணலாம்.
இதேபோல் அலைபாயும் நம் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான்.
அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடி இருக்கும். அந்த இருள் அகன்றால்தான் நம் உள் மனதில் உள்ள இறைவனைக் காண முடியும்.
வாயால் ஊதித் தீபத்தை அணைப்பது குற்றமாகும். கற்பீர தீபம் எரியத் தொடங்கிய நேரம் முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது.
கற்பூர வகைகள்
இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் பச்சைக் கற்பூரம் அரோமெடிக்கா என்னும் தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
கற்பூர மரத்திலிருந்து கிடைக்கும் கற்பூரம் கட்டி கற்பூரமாகும்.
வில்லை கற்பூரம் செயற்கை கற்பூரமாகும். இதனை பைன் மரங்களிலிருந்து எடுப்பர்.