ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

இந்து மதத்தை பற்றிய சில அற்புதமான உண்மைகள்

இந்து மதத்தை இவர் தான் துவங்கினார், இதன் அடிப்படையில் இருந்து பிறந்தது, இந்து மதத்தின் தோற்றம் இந்த காலத்தில் இருந்து தொடங்கியது என வரலாற்றில் எந்த ஒரு சுவடும் இல்லை. இதற்கான பதில் எங்கும் இல்லை
.
இந்து மதம் என்பது மனித இனம் உருவான காலக்கட்டத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் என கருதுகிறார்களே தவிர, அதற்கான சான்றுகள் ஏதும் இல்லை.
பெரிய வரலாறு கொண்டுள்ள இந்து மதத்தில் ஒருவரது பிறப்பில் இருந்து இறப்பு வரை அவர் எப்படி வாழ வேண்டும். எந்த மாதிரியான தீய செயல்களில் ஈடுபட்டால் எப்படிப்பட்ட தண்டனைகள் / பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளன.
தகவல் #1
உலக மக்கள் தொகையில் 13.8 சதவீதத்தினர் இந்து மதத்தை தழுவி உள்ளவர்கள் ஆவார்கள்.
தகவல் #2
இந்து மதத்தை இவர் தான் துவங்கினார், இந்த நாள், இந்த வருடத்தில் தான் ஆரம்பமானது, இந்து மதத்தின் தோற்றம் இங்கிருந்து தான் வந்தது என எதுவுமே கிடையாது.
தகவல் #3
முற்பகல் செய்யும், பிற்பகல் விளைவும் என்ற பழமொழியின் அடிப்படையை இந்து மதம் நம்புகிறது. இதை தான் கர்மா என கூறப்படுகிறது.
ஒருவர் செய்யும் நல்லது, கெட்டது சார்ந்து தான் அவரது முடிவு தீர்மானாம் ஆகிறது என்ற கோட்பாடு இந்து மதத்தில் நம்பப்படுகிறது.
தகவல் #4
இந்து மதத்தில் ஏறத்தாழ 33 மில்லியன் கடவுள் / கடவுள்தன்மை உள்ளவர்களை வணங்குகின்றனர்.
தகவல் #5
மகாபாரதம் வழியாக இந்து மதத்தில் வாழ்க்கையின் தத்துவம் எடுத்துரைக்கப்படுகிறது.
இதில் மொத்தம் 1.8 மில்லியன் வார்த்தைகள் அடங்கியிருக்கின்றன. உலகிலேயே பெரிய கவிதையாக இது கருதப்படுகிறது.
தகவல் #6
பெரும்பாலான இந்து மத மக்கள் இறைச்சி உண்கின்றனர். 30% மக்கள் தான் இறைச்சியை உண்பது இல்லை.
தகவல் #7
உலகிலேயே பெரிய இந்து மத வழிபாட்டு தளமாக விளங்குகிறது அங்கோர் வாட். இதன் மொத்த சுற்றளவு 401 ஏக்கர்கள் ஆகும்.
தகவல் #8
ப்ரயோபவேசா! தாங்கள் பிறந்ததற்கான கடமை / வேலைகள் முடிந்தது எனில், விரதம் இருந்து தற்கொலை மேற்கொள்வது வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது. இதை ‘ப்ரயோபவேசா’ என அழைக்கின்றனர்.