புதன், 2 மே, 2018

இன்றைய ராசிபலன் (02.05.2018)

மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் தொட ர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப் போது கோபப்படுவீர்கள். விமர்சன ங்களை கண்டு அஞ்சாதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங் களால் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.
சிம்மம்
சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமை யும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கன்னி
கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளெடுக்கும் நாள்.
துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷ ங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
தனுசு
தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மகரம்
மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கும்பம்
கும்பம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மீனம்
மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.