சனி, 1 அக்டோபர், 2016

இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம்

உலகம் முழுவதிலும் பரந்துபட்டு வாழும் இந்து க்கள் யாவரும் இன்று முதல் வரும் ஒன்பது நாட்களிலும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். ஒளியும் இருளும் சமபங்காகக் கொண்ட சுற்றில் ஒளிக்காலத்தில் வசந்த நவராத்திரியும் இருள் காலத்தில் சாரதா நவராத்திரியும் என பெயர் பெற்றுள்ளது. இதில் சாரதா நவராத்திரியே விரதமாகவும் பண்டி கையாகவும் விழாவாகவும் கொண்டாடப் படுகின்றது.

சாரதா நவராத்திரியின் ஒன்பது தினங்களிலே சக்தியை முதல் மூன்று தினங்களும் துர்க்கையாக வும் அடுத்து மூன்று தினங்கள் லஷ்மியாகவும். இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதியாகவும் வழிபடுதல் மரபாக வுள்ளது. இவ்வழி பாட்டின் மூலம் வீரம் செல்வம் கல்வி என்றும் மிகப் பெரும் பேறுகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
நவராத்திரி தினமான இன்று வீடுகள் மற்றும் பூஜைகள் இடம்பெறும் இடங்களில் தாமரைப் பூக் கோலத்தில் கும்பம் வைத்தல், கொலுவைத்தல் ஸ்ரீ சக்கர மகாயந்திர பூஜை செய்தல், ஆலயங்களில் இடம்பெறும் சண்டி ஹோமம் வளர்க்கப்படும் இடங்களுக்கு சென்று தரிசித்தல் கொலு வைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று பஜனை செய்தல் போன்றவைகளை கடைப்பிடித்தல் சிறந்தது.
மேலும் இன்று துர்க்கைக்குரிய நாள் என்பதால் தேவார பாசுரங் களை தோடி இராகத்தில் பாடி வெண்பொங்கல் கடலை, வாழைப் பழம் என்பன நிவேதனமாக வைத்து மல்லிகை பூவினாலும் வில்வம் பத்திரத்தினாலும் அர்சித்து துர்க்காதேவி யின் அருள் பெற்று மங்களகரமாக வாழ வழிகாட்டுகின்றது