ஞாயிறு, 24 ஜூலை, 2016

வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்க பிள்ளையார் கொடியேற்றம்

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும்
கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது.
சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து தம்பத்துக்கு அபிஷேகமும் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்று பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜா சிவாசாரியார் பிரதம குருவினால் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விநாயகப்பெருமான் உள் வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன.
பல இடங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது .